
சப்பாத்தி
சைவம்வெதுவெதுப்பான நீர் அல்லது பாலால் பிசைந்த கோதுமை மாவை ஊற வைத்து மெதுவான சப்பாத்தியாக சுடப்படும் அன்றாட ரொட்டி.
- தயாரிப்பு நேரம்
- 40 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 20 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 60 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- எளிது
வகைகள்சப்பாத்தி வகை
பொருட்கள்
- கோதுமை மாவு (மைதா விலும் சப்பாத்தி செய்யலாம்)
- தேவையான அளவு வெதுவெதுப்பான நீர் அல்லது பால் (மாவு பிசைவதற்கு)
- சிறிது வெண்ணெய் அல்லது நல்லெண்ணெய்
- ¼ தேக்கரண்டி நெய் (ஒவ்வொரு சப்பாத்திக்கும்)
செய்முறை
- பொதுவாக கோதுமை மாவில் சப்பாத்தி செய்யலாம். மைதாவிலும் சப்பாத்தி மாவு பிசைவதற்கு பெரும்பாலும் தண்ணீரே உபயோகப்படுத்தப்படுகிறது. வெதுவெதுப்பான நீர் அல்லது பால் உபயோகிக்கலாம்.
- சப்பாத்தி மெதுவாக இருக்கும். மாவில் வெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சிறிது சேர்த்துப் பிசையலாம். சப்பாத்தி மாவையும் பிசைந்து ஒரு அரை மணி நேரம் ஊற வைத்து சுட்டால் சப்பாத்தி மெதுவாக இருக்கும்.
- சப்பாத்தி மாவைச் சலித்து, ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். உப்பு, வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொண்டு அதன் பின்னர் தண்ணீர் விட்டுப் பிசைந்து, ஈரத் துணியினால் மூடித் தனியே வைக்கவும்.
- சப்பாத்திகளைச் சற்று திண்ணமாக இடவும். சப்பாத்திகளை தோசைச் சட்டியில் போடவும். இருபக்கமும் சற்று உலர்ந்த மாதிரி வந்த பின் ¼ தேக்கரண்டி நெய்யை சுற்றி விட்டால் சப்பாத்தி பந்து போல் எழும்பி வரும்.
- இருபுறமும் திருப்பிப்போட்டு சப்பாத்திக்கு சிறு தீ தான் இருக்கவேண்டும்.