சிலோன் சிக்கன் பிரைய்
சிலோன் சிக்கன் பிரைய்
வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி
பொருட்கள்
- 1 கிலோ தோல் உரித்த கோழி (பெரிய துண்டுகளாக வெட்டவும்)
- 8 வற்றல்
- 1 டீஸ்பூன் மிளகு
- 5 கரண்டி ரீபைண்ட் ஆயில்
- 1 டேபிள் ஸ்பூன் சீரகம்
- 2 டேபிள் ஸ்பூன் மல்லி
- 2 பல் பூண்டு
- 1/4 கிலோ வெங்காயம்
- 1 துண்டு இஞ்சி
- 4 தக்காளி
- 4 முட்டை
செய்முறை
- மசாலாப் பொருட்களை அரைத்து கோழித்துண்டுகளில் போட்டு உப்பு, மஞ்சள் தூள், தக்காளி போட்டு வேக வைக்கவும். வெந்த பின் நீர் இல்லாமல் வற்ற வைக்கவும். பின் ஆற வைத்து கோழித்துண்டுகளிலுள்ள எலும்புகளை நீக்கவும். வாணலியில் எண்ணெயை ஊற்றி வெட்டிய வெங்காயம் போட்டு வதங்கியதும் கறித்துண்டுகளைப் போட்டு 5-10 நிமிடம் வதக்கவும். முட்டைகளை உப்பு போட்டு அடித்து தனியாக பொடிமாஸ் செய்து கோழி வறுவலுடன் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கி எடுக்கவும்.