
காலிப்ளவர் கபாப்
சைவம்ஆவியில் வேகவைத்த காலிப்ளவர்-கடலைப்பருப்பை வறுத்த முழு மசாலாவுடன் அரைத்து குழல் வடிவில் பொரித்து வினிகர் வெங்காயத்துடன் பரிமாறப்படும் கபாப்.
- தயாரிப்பு நேரம்
- 40 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 25 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 65 நிமிடங்கள்
- பேருக்கு
- 6
- கடினத்தன்மை
- கடினம்
வகைகள்கபாப் வகைகள்
பொருட்கள்
- 1 கப் கடலைப் பருப்பு
- 1 காலிப்ளவர்
- 6 துண்டுகள் ரொட்டி
- 1/4 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
- 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை
- 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
- தேவைக்கேற்ப உப்பு
- 2 டேபிள் ஸ்பூன் ரொட்டித் தூள்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டேபிள் ஸ்பூன் கசகசா
- 2 ஏலக்காய்
- 2 பல்லு பூண்டு
- 2 இலவங்கம்
- 7 காய்ந்த மிளகாய்
- எண்ணெய் (பொரிப்பதற்கு)
- வெள்ளை வெங்காயம் (வினிகர் வெங்காயத்திற்கு)
- சிறிது உப்பு, வெள்ளை மிளகுத் தூள், சர்க்கரை, அஜி-நோ-மோட்டோ, மால்ட் வினிகர் (வினிகர் வெங்காயத்திற்கு)
செய்முறை
- காலிப்ளவரை நன்றாகக் கழுவி பெரிய பூக்களாகப் பிரித்தெடுக்கவும். சல்லடை போன்ற கிண்ணத்தில் போட்டு குக்கரில் ஆவியில், மேல் தட்டில் 3 நிமிடங்கள் வேக வைக்கவும் (வெயிட் போடவேண்டாம்).
- பருப்பைக் கழுவி தண்ணீர் விட்டு குக்கரில் ஒரு விசில் சத்தம் வரும்வரை வெயிட் வைத்து வேக வைக்கவும் (அதிகம் வேகக் கூடாது). வெந்த பருப்பின் தண்ணீரை நன்கு வடித்துவிடவும்.
- கசகசாவையும், சீரகத்தையும் தனித்தனியாக வேறு வாணலியில் வறுத்துக் கொள்ளவும். அதோடு சிகப்பு மிளகாய், பூண்டு, ஏலக்காய், இலவங்கம் சேர்த்து மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும் (பொடி சரியாக வராவிடில் சிறிதளவே தண்ணீர் விட்டு அரைக்கவும்).
- கடைசியில் வெந்த காலிப்ளவர், பருப்பைச் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை சிவக்க வதக்கி, அரைத்த விழுதைக் கொட்டி சில நிமிடங்கள் கிளறவும் (ஈரம் நன்கு வற்றும் வரை).
- பிரட்டை ஒவ்வொன்றாகத் தண்ணீரில் முக்கி நன்கு பிழிந்துவிட்டு இக் கலவையில் சேர்க்கவும். உப்பு, கொத்தமல்லித் தழை, சிறிது கடலைமாவு சேர்த்து நன்றாகப் பிசையவும் (சப்பாத்தி மாவு போல கெட்டியாக இருக்க வேண்டும்).
- முன்பு கூறியது போல நீளவாக்கில் உருட்டி எண்ணெயில் பொரிக்கவும் அல்லது ஓவனில் 'Skewers' உபயோகப்படுத்தி பேக் செய்யவும். பரிமாறும் முன் இரண்டு அல்லது மூன்று துண்டங்களாக வெட்டி வினிகர் வெங்காயத்துடன் பரிமாறவும்.
- வினிகர் வெங்காயம்: வெள்ளை வெங்காயத்தை வட்ட வடிவமாக மெலிதாக நறுக்கவும் (rings) அல்லது மெல்லிய நீளத் துண்டங்களாக அரிந்து அதோடு உப்பு, வெள்ளை மிளகுத் தூள், சிறிது சர்க்கரை, அஜி-நோ-மோட்டோ மற்றும் மால்ட் வினிகர் சேர்த்து கலக்கவும். 1/2 மணி நேரம் ஊறியதும் பரிமாறவும்.