
முந்திரி பருப்பு பகோடா
சைவம்முந்திரிப்பருப்பு, கடலைமாவு, அரிசி மாவுடன் வெங்காயம், மிளகாய் சேர்த்து பிசைந்து எண்ணெயில் பொரிக்கப்படும் மொறுமொறுப்பான பகோடா.
- தயாரிப்பு நேரம்
- 20 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 20 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 40 நிமிடங்கள்
- பேருக்கு
- 6
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்பஜ்ஜி
பொருட்கள்
- ½ கிலோ முந்திரி
- ½ கிலோ கடலைமாவு
- ¼ கிலோ வனஸ்பதி
- ¼ கிலோ பெரிய வெங்காயம் (நறுக்கியது)
- 150 கிராம் அரிசி மாவு
- 5 பச்சை மிளகாய்
- 3 கொத்து கறிவேப்பிலை
- சிறிய துண்டு இஞ்சி
- எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)
- தேவையான அளவு உப்பு
செய்முறை
- வனஸ்பதியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலக்கிக் கொள்ளவும். அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, முந்திரி பருப்பு, கடலை மாவு, அரிசி மாவு இவற்றை போட்டு பிசறிக் கொள்ளவும்.
- இந்த கலவையை சிறிய உருண்டைகளாகவோ அல்லது சிறு கரண்டியில் அள்ளி போட்டோ எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பகோடா மீது கறிவேப்பிலையை வறுத்து போட்டு சூடாக பரிமாறவும்.