குடை மிளகாய் முட்டை

வகைகள்சிற்றுண்டி

பொருட்கள்

  • 6 பெரிய குடை மிளகாய்
  • 1 கப் துருவிய தேங்காய்
  • 8 மிளகாய்
  • 6 வெங்காயம்
  • 1 கப் பச்சைப்பட்டாணி
  • 1 சிறியகோஸ்
  • 6 முட்டை
  • 4 கப் துருவிய சீஸ்
  • 1 தேக்கரண்டி உப்பு
  • 2 தேக்கரண்டி கரம் மசாலா

செய்முறை

  1. முட்டைக்கோஸ், வெங்காயம், மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். குடை மிளகாயின் மேல் காம்புகளை நறுக்கி, உள்ளிருக்கும் விதைகளை நீக்கவும். உப்புக் கலந்த கொதிநீரில் மிளகாயை 3 நிமிடம் போட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், கோஸ், மிளகாய், பட்டாணி இவற்றை வதக்கி உப்பைப் போடவும். துருவிய தேங்காயையும் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். கரம் மசாலாத்தூள் சேர்த்துப் புரட்டவும். இந்தக் கலவையைக் குடமிளகாயின் முக்கால் பாகம் நிறையும் வரை அடைக்கவும். முட்டையை உடைத்து குடமிளகாயின் மேல் ஊற்றவும். ஒவ்வொரு குடமிளகாயின் உள்ளும், ஒரு முட்டை ஊற்றி, சீஸ் துருவல் தூவி, அடுப்பில் வேக வைத்து சுடச் சூடாகப் பரிமாறவும்.