குடமிளகாய் பஜ்ஜி-இன் புகைப்படம், வெங்காயம் நிரப்பப்பட்டு பரிமாறப்பட்டுள்ளது

குடமிளகாய் பஜ்ஜி

சைவம்

சிறிய குடமிளகாய்களை முழுவதுமாக கடலைமாவு மாவில் தோய்த்து பொரித்து, பிளந்து வெங்காயம்-எலுமிச்சை சேர்த்து பரிமாறப்படும் பஜ்ஜி.

தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
15 நிமிடங்கள்
மொத்த நேரம்
35 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
எளிது
வகைகள்பஜ்ஜி

பொருட்கள்

  • 1/2 கிலோ சிறிய குடமிளகாய்
  • 1 1/2 கப் கடலை மாவு
  • 1/2 கப் அரிசி மாவு
  • 1 டீஸ்பூன் பொடி உப்பு
  • 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 2 சிட்டிகை சமையல் சோடா
  • எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)
  • 1/2 கப் மிகப் பொடியாக அரிந்த வெங்காயம் (மேலே அலங்கரிக்க)
  • 1 எலுமிச்சம் பழம் (மேலே அலங்கரிக்க)

செய்முறை

  1. மாவு வகைகளோடு உப்பு, மிளகாய்த் தூள், சமையல் சோடா சேர்த்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவை விட சிறிது கெட்டியாக கரைக்கவும்.
  2. முழு குடமிளகாயை இந்த மாவில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் பஜ்ஜி போல பொரித்தெடுக்கவும்.
  3. பொரித்த பிறகு மத்தியில் கூரான கத்தியால் பாதி அளவிற்கு லேசாகப் பிளந்து அரிந்த வெங்காயம் சிறிது வைத்து சிறிதளவு எலுமிச்சை ரசம் பிழிந்து உடனே பரிமாறவும்.
  4. பானிபூரியில் குறிப்பிட்டுள்ள இனிப்புச் சட்னியோடு பரிமாறவும்.