முட்டைகோஸ் ஸ்டீக்ஸ்-இன் புகைப்படம், தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

முட்டைகோஸ் ஸ்டீக்ஸ்

சைவம்

மசாலா கடலைப்பருப்பு-முட்டைக்கோஸ் மாவை குழலாக ஆவியில் வேக வைத்து வட்டமாக வெட்டி பொன்னிறமாக பொரிக்கப்படும் சிற்றுண்டி.

தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
20 நிமிடங்கள்
மொத்த நேரம்
50 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி

பொருட்கள்

  • 1 கப் கடலைப் பருப்பு
  • 7 காய்ந்த மிளகாய்
  • 2 டீஸ்பூன் கசகசா
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 அங்குலத் துண்டு பட்டை
  • 2 பல்லு பூண்டு
  • 1 1/2 கப் முட்டைக்கோஸ் துருவல்
  • தேவையான அளவு உப்பு
  • எண்ணெய் (பொரிப்பதற்கு வேண்டிய அளவு)

செய்முறை

  1. கடலைப் பருப்பைக் கழுவி தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். கசகசா, மிளகாய், சீரகம், பட்டை முதலியவற்றை முதலில் பொடியாக்கி கடைசியில் பூண்டு சேர்த்து அரைக்கவும்.
  2. கடைசியில் ஊற வைத்து வடித்த பருப்பைச் சேர்த்து வடைக்கு அரைப்பதைப் போல கரகரப்பாக அரைக்கவும். கடைசியில் உப்பு சேர்த்து எடுக்கவும்.
  3. இதோடு துருவிய கோசைக் கலந்து நீள வாக்கில் கைப்பிடி அளவு உருட்டவும். சிறிது எண்ணெய் தடவிய குக்கர் தட்டில் வரிசையாக அடுக்கி 7 நிமிடங்கள் குக்கரில் ஆவியில் வேக வைக்கவும்.
  4. ஆறிய பின் 1/2 அங்குல கனத்திற்கு துண்டங்களாக்கவும் (வட்ட வடிவமாக இருக்கும்). எண்ணெயில் கொள்ளுமளவிற்கு போட்டு இளம் சூட்டிலேயே பொரிக்கவும். பொன்னிறமாக எடுத்து சூடாகப் பரிமாறவும்.