வெண்ணெய் சிக்கன் மசாலா
வெண்ணெய் சிக்கன் மசாலா
வகைகள்கறி
பொருட்கள்
- 1 கோழி (சிறியதாக நறுக்கியது)
- 1 கப் கெட்டியான தயிர்
- 1 டீஸ்பூன் கறிமசால்தூள்
- 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது
- 50 கிராம் வெண்ணெய்
- 4 தக்காளி
- 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்தூள்
- 2 டேபிள் ஸ்பூன் தனியாதூள்
- 1 டீஸ்பூன் மஞ்சள்தூள்
- 2 டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ்
- 1/2 டேபிள் ஸ்பூன் சாக்கரை
- 25 கிராம் முந்திரி பருப்பு
- 25 கிராம் உலர்ந்த திராட்சை
- தேவையான அளவு உப்பு
- தேவையானது எண்ணெய்
செய்முறை
- தயிர், கறிமசால் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு இவற்றை கறியுடன் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். இவற்றை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். வெண்ணெய், தக்காளி, மிளகாய், தனியா, மஞ்சள் தூள்கள் மற்றும் தக்காளி சாஸ், சர்க்கரை, முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை முதலியவற்றை சேர்த்து கலந்து நன்கு கொதிக்க விடவும். எண்ணெய் பிரியும் சமயத்தில் வறுத்த கோழியை இதில் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.