வாழைக்காய் வறுவல்-இன் புகைப்படம், தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

வாழைக்காய் வறுவல்

சைவம்

பச்சை வாழைக்காய் வட்டங்களை கடலைப்பருப்பு-சிகப்பு மிளகாய் விழுதில் பூசி ஓய்வு விட்டு மொறுமொறுப்பாக பொரிக்கப்படும் வறுவல்.

தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
15 நிமிடங்கள்
மொத்த நேரம்
35 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
எளிது
வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி

பொருட்கள்

  • 2 வாழைக்காய்
  • எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)
  • 1/2 கப் கடலைப் பருப்பு (அரைக்க)
  • 10 காய்ந்த மிளகாய் (அரைக்க)
  • 1 1/2 டீஸ்பூன் தனியா (அரைக்க)
  • 3 அல்லது 4 சிறு வெங்காயம் (அரைக்க)
  • 1/2 டீஸ்பூன் உப்பு (அரைக்க)
  • சிறிதளவு புளி (அரைக்க)

செய்முறை

  1. வாழைக்காயைத் தோல்சீவி 1/2 அங்குல வட்டத் துண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்த தண்ணீரில் போட்டு வைக்கவும்.
  2. பருப்பைக் கழுவி தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்துவிட்டு குறிப்பிட்ட மற்ற பொருட்களுடன் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
  3. அரைத்த விழுதை வாழைக்காயின் இரு பக்கவும் பூசி 1/2 மணி நேரம் தட்டில் அடுக்கி வைக்கவும்.
  4. நான்கைந்து துண்டங்களாக சூடான எண்ணெயில் பொரித்து சூடாகப் பரிமாறவும்.