கத்திரிக்காய் மசாலை

வகைகள்கறி

பொருட்கள்

  • ½ கிலோ கத்திரிக்காய்
  • 100 கிராம் வெங்காயம்
  • 100 கிராம் தக்காளி
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்ப் பொடி
  • 1 டேபிள் ஸ்பூன் மல்லிப் பொடி
  • 1 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • பட்டை, சோம்பு
  • தலா 1 டீஸ்பூன் இலவங்கஇலை
  • 50 கிராம் எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு

செய்முறை

  1. கத்தரிக்காயை நான்காக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, பட்டை, சோம்பு, இலவங்கம் தாளித்து அதில் வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி சேர்த்துக் கிளறவும். கத்திரிக்காய் சேர்த்து மூன்று நிமிடம் வதக்கவும். பிறகு கால் டம்ளர் வெந்நீர் ஊற்றி வேக விடவும். தண்ணீர் நன்றாக வற்றியதும் அடுப்பிலிருந்து எடுக்கவும்.