சிக்கன் கடாய்

வகைகள்கறி

பொருட்கள்

  • 500 கிராம் நாட்டுக் கோழிக்கறி
  • சிறிதளவு பச்சை மிளகாய்
  • 500 கிராம் தக்காளி
  • 50 கிராம் ரீபைண்ட் ஆயில்
  • சிறிதளவு இஞ்சி, பூண்டு
  • சிறிதளவு கொத்தமல்லிதழை
  • சிறிதளவு வெங்காயம்
  • சிறிதளவு கரம் மசாலா
  • வெந்தயம்

செய்முறை

  1. கோழியை நன்றாக சுத்தம் செய்து பெரியதுண்டுகளாக வெட்டவும். தக்காளி, இஞ்சி, மல்லிதழை, பச்சைமிளகாய் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சைமிளகாய் மல்லி நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு பூண்டை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் தக்காளியையும் சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு கொதி வந்தவுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சிப் போட்டு கிளற வேண்டும். பிறகு கோழிக்கறியை சேர்த்து எண்ணெயில் சுருள வேக விட வேண்டும். சிக்கன் வெந்ததும் கரம் மசாலா, வெந்தயம் சேர்த்து கிளறி இறக்கவும். சிக்கன் மணத்துடன் சுவையாக இருக்கும்.