கேரட் ரிசோல்ஸ்-இன் புகைப்படம், தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

கேரட் ரிசோல்ஸ்

சைவம்

ஆவியில் வேகவைத்து மசித்த கேரட்டை சாதம், வதக்கிய வெங்காயம்-குடமிளகாயுடன் கலந்து ரொட்டித் தூளில் பொதிந்து மொறுமொறுப்பாக பொரிக்கப்படும் ரிசோல்.

தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
20 நிமிடங்கள்
மொத்த நேரம்
55 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்கட்லெட் வகைகள்

பொருட்கள்

  • 1 கப் அரிசி சாதம்
  • 200 கிராம் கேரட்
  • 1 வெங்காயம் (பெரியது)
  • 1 அல்லது 2 குடமிளகாய்
  • தேவையான அளவு உப்பு
  • 1 டீஸ்பூன் மிளகாய்ப் பொடி
  • 1/2 டீஸ்பூன் கரம்மசாலா பொடி
  • 1/4 கப் ரொட்டித் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மக்காச்சோளமாவு
  • 3 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • எண்ணெய் (வேண்டிய அளவு)
  • 2 டேபிள் ஸ்பூன் மைதா (பசைக்கு)
  • 1 டேபிள் ஸ்பூன் மக்காச்சோளமாவு (பசைக்கு)
  • 6 டேபிள் ஸ்பூன் தண்ணீர் (பசைக்கு)

செய்முறை

  1. முழு கேரட்டை ஆவியில் வேகவைத்து மசித்துக் கொள்ளவும். வெங்காயம், குடமிளகாயை மிகப் பொடியாக அரியவும்.
  2. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுச் சூடாக்கி வெங்காயம், குடமிளகாயை சில நிமிடங்கள் வதக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி, நன்றாகப் பிசைந்த சாதத்துடன் கலந்து, மசித்த கேரட், பாதி பிரட் தூள், மற்ற பொடி வகைகளைச் சேர்க்கவும்.
  3. கைகளால் சப்பாத்தி மாவு போல கெட்டியாக கலக்கவும். எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும்.
  4. பிரட் தூளில் புரட்டி, மைதா குழைத்த கலவையில் முக்கி எடுத்து, மற்றொரு முறை பிரட் தூளில் புரட்டி எடுக்கவும். விருப்பப்பட்டால் நீளவாக்கில் உருட்டவும். ஒரு தட்டில் அடுக்கி 1 மணி நேரம் ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்.
  5. பொரிப்பதற்கு முன்னெடுத்து சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரிக்கவும். சூடாக தக்காளி சாஸுடன் பரிமாறவும்.