பேக்டு பிரின்ஜால்-இன் புகைப்படம், தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

பேக்டு பிரின்ஜால்

சைவம்

மாவில் தோய்த்து பொரித்த கத்தரிக்காய் வட்டங்களை தக்காளி சாஸ், சீஸுடன் அடுக்கி பொன்னிறமாக பேக் செய்யப்படும் சிற்றுண்டி.

தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
30 நிமிடங்கள்
மொத்த நேரம்
60 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்சிற்றுண்டி

பொருட்கள்

  • 1 கிலோ பெரிய பஜ்ஜி கத்தரிக்காய்
  • 1/4 கப் மைதா
  • 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • 100 கிராம் சீஸ் (பாலாடைக் கட்டி)
  • 1/4 கப் தக்காளி சாஸ்
  • தேவைக்கேற்ப உப்பு
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்ப் பொடி
  • 1/4 டீஸ்பூன் மிளகுப் பொடி
  • 1/2 கப் காய்ந்த ரொட்டித் தூள்
  • எண்ணெய் (தேவையான அளவு)

செய்முறை

  1. கத்தரிக்காயை கழுவி மெல்லிய வட்டங்களாக அரியவும். கலர் மாறாமலிருக்க உப்பு சேர்த்த தண்ணீரில் போட்டு வைக்கவும்.
  2. மைதா, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு போல பிசையவும்.
  3. தண்ணீரில் உள்ள கத்தரிக்காய்த் துண்டங்களை நன்றாகத் துடைத்துவிட்டு மைதாமாவில் தோய்த்து பிரட் தூளின் மேல் புரட்டவும். சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
  4. ஒரு பேக் செய்யும் வட்ட வடிவமான பாத்திரத்தில் உள்ளே வெண்ணெய் தடவி பொரித்த கத்தரிக்காயை அதில் ஒரு அடுக்கு வைக்கவும். அதன் மேலே சிறிது உப்பு, மிளகுத் தூள் தூவி சிறிதளவு தக்காளி சாஸ் பரப்பி சிறிது துருவிய சீஸை மேலே தூவவும்.
  5. அதன்மேலே இரண்டாவது அடுக்கு கத்தரிக்காய் வைக்கவும். முன்பு கூறியபடியே சாஸ், சீஸ் அடுக்குடுக்காக பரப்பவும். பாத்திரத்தின் முக்கால் பாகம் நிரம்பும்வரை இதே மாதிரி செய்யவும். கடைசி அடுக்காக அதிகமான சீஸை பரப்பவும்.
  6. முன்பே சூடாக்கிய ஓவனில் (Oven) வைத்து சீஸ் நன்றாக உருகி மேலே லேசாக பொன்னிறமாகும் வரை பேக் செய்யவும். சூடாகப் பரிமாறவும்.